மோடியுடன் இராமன் கோவில் விழாவில் கலந்துகொண்ட சாமியாருக்கு கொரோனா..
புதுதில்லி (13 ஆக 2020):இராமன் கோவில் பூமி பூஜை-க்கான விழாவின்போது மோடியுடன் அந்த பூஜையில் கலந்துகொண்ட நிருத்ய கோபால் தாஸ் சுவாமி-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இவர் இராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவராகவும் இருக்கின்றார். பிரதமர் மோடியுடன் அந்த பூஜையில் அவர் கலந்துகொண்டபோது எடுக்ப்பட்ட படங்களில் அவர் முகத்திரை அணியாமல் பிரதமர் மோடியுடன் மிக நெருக்கமாக இருந்த கைகுலுக்கிக் கொள்ளும் படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. அவ்விழாவில் உ.பி. முதல்வர்,கவர்னர் ஆகியோரும்…