இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எம்பி பதவி – பிரதமர் மோடி அறிவிப்பு!
புதுடெல்லி (06 ஜூலை 2022): இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இளையராஜாவின் படைப்பு மேன்மை தலைமுறைகளைக் கடந்து மக்களை மகிழ்வித்திருக்கிறது எனவும் மோடி தெரிவித்துள்ளார். சமீபத்தில் பிரதமர் மோடியை டாக்டர் அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.