மசூதிகளுக்கு அருகில் ஹனுமான் பாடல் ஒலிக்க தடை – மகாராஷ்டிரா காவல்துறை உத்தரவு!
நாசிக் (18 ஏப் 2022): மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ஹனுமான் ஊர்வலம் மற்றும் பஜனையின்போது மசூதிகளில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் ஒலிபெருக்கியில் ஹனுமான் பாடல் இசைக்க தடை விதித்து நாசிக் நகர காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நகரின் காவல் ஆணையர் தீபக் பாண்டே ANI செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஹனுமான் ஊர்வலம் மற்றும் பஜனைக்கு முன் அனுமதி பெற வேண்டும். மசூதிகளில் பாங்கு அழைப்புக்கு முன்னும் பின்னும் 15 நிமிடங்களுக்கு ஹனுமான் பாடல் இசைக்க அனுமதி இல்லை….