முகக்கவசம் இல்லை, சமூக இடைவெளி இல்லை – ஆயிரக்கணக்கானோர் புடைசூழ நடந்த அமைச்சர் வீட்டு திருமணம்!
கோவை (12 ஜூன் 2020): கொரோனா விதிமுறைகளைப் பற்றி கண்டுகொள்ளாமல் ஆயிரக்கணக்கானோர் புடைசூழ அமைச்சர் ராதாகிருஷ்ணன் இல்ல திருமணம் அமர்க்களமாக அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோலார்பட்டியை சேர்ந்தவர் கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் ஜெயபிரனிதா, பொள்ளாச்சி நகராட்சி முன்னாள் துணை தலைவர் விஜயகுமாரின் மகன் ஆதித்யன் ஆகியோருக்கு, கோலார்பட்டி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று திருமணம் நடந்தது. கொரோனா விதிமுறைகளைப் பற்றி கவலைப் படாமல் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று அதிர்ச்சி அடைய வைத்துள்ளனர். அரசுத்துறை அதிகாரிகள்,…