தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – பேரிடர் மீட்புப்படை விரைவு!
சென்னை (06 டிச 2022): தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறுகிறது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெறும் நிலையில் டிசம்பர் 8 ஆம் தேதி இது புயலாகவும் தீவிரமடைகிறது. இதற்கு மாண்டஸ் என பெயரிடப்படுகிறது. இந்த பெயரை ஐக்கிய அரபு நாடுகள்…