இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக லடாக்கில் பாலம் கட்டும் சீனா!
லடாக் (04 ஜன 2022): லடாக்கில் அத்து மீறும் சீனா, இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் சோ ஏரியின் மீது பாலம் கட்டும் செயற்கைக்கோள் காட்சி. புவி-உளவுத்துறை நிபுணரான டேமியன் சைமன் மூலம் பெறப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அதன்படி பாங்கோங் ஏரியின் இருபுறங்களையும் இணைக்கும் பாலத்தின் கட்டுமானப் பணிகள் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவிக்கிறது. இந்தப் பாலம் அங்கு கட்டப்படுவதால், அப்பகுதியில் ராணுவ நடவடிக்கை நடந்தால், அதிவேகப் படைகளையும், ஆயுதங்களையும் குவிக்க…