
ஹிஜாபை அனுமதிக்கும் வகையில் 10 கல்லூரிகள் நிறுவ கர்நாடக வக்பு வாரியம் முடிவு!
பெங்களூரு (01 டிச 2022): கர்நாடக மாநிலத்தில் கல்லூரிகளில் ஹிஜாப் தடையை தொடர்ந்து அங்கு முஸ்லிம் மாணவிகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் ஹிஜாபை அனுமதிக்கும் வகையில் 10 கல்லூரிகளை நிறுவ கர்நாடக வக்ஃப் வாரியம் திட்டமிட்டுள்ளது. மங்களூரு, ஷிவமொக்கா, ஹாசன், குடகு ஆகிய இடங்களில் கல்லூரிகள் தொடங்கப்படும். இக்கல்லூரிகளுக்கான நிதி வக்பு வாரியம் மூலம் திரட்டப்படும். மார்ச் 2021 இல் கர்நாடகாவில் ஹிஜாப் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கர்நாடகாவில் உள்ள அரசுக் கல்லூரிகளில் ஹிஜாப் தடை அமலில்…