மேற்கு வங்கத்தில் குடியேறியுள்ளவர்களுக்கு மம்தா மகிழ்ச்சியான தகவல்!

கொல்கத்தா (03 மார்ச் 2020): மேற்கு வங்கத்தில் குடியேறியுள்ள அனைவரும் இந்தியர்கள்தான் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை சட்டதிருத்தமான சி.ஏ.ஏ.வை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்நிலையில் மேற்கு வங்கத்தின் காலியாகஞ்ச் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் குடியேறியுள்ள அனைவருமே இந்திய நாட்டின் குடிமக்களே. அவர்களுக்கு இந்திய குடியுரிமை இருக்கிறது. அவர்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும்…

மேலும்...

ஒரு கோடி முஸ்லிம்கள் வெளியேற்றப் படுவார்கள் – பாஜக தலைவர் பேச்சு!

கொல்கத்தா (20 ஜன 2020): மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக உள்ள ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்களாதேஷுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என அம்மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பேரணியில் அம்மாநில பாஜக தலைவர் திரு. திலீப் கோஷ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், மேற்கு வங்கத்தில். என்.ஆர்.சியை அமல்படுத்த கடமைப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மேற்கு வங்கத்தில் ஒரு கோடி இஸ்லாமியர்கள் தங்கியுள்ளதாகவும், அவர்கள் மீண்டும் பங்களாதேஷிற்கே திருப்பி அனுப்பப்படுவார்கள்…

மேலும்...