சட்டவிரோத பண வசூல் – தொண்டு நிறுவனங்களுக்கு சவூதி அரசு கடும் எச்சரிக்கை!
ரியாத் (28 ஜூன் 2021): சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக வசூலில் ஈடுபடும் தொண்டு நிறுவனங்கள் மீது சவூதி அரசு கடும் நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. தனிநபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சவுதியில் தொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ அல்லது பணம் திரட்டவோ அனுமதிக்கப் படுவதில்லை. மாறாக, அரசாங்க அலுவலகத்தை அணுகி முறையாக விண்ணப்பித்து அதிகாரப் பூர்வமாக அனுமதி பெற்ற பின்பே பண வசூல் எதுவும் மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக ஈடுபட்டதற்காக…