விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டது உண்மையா?
புதுடெல்லி (04 ஜூன் 2020): மோசடி மன்னன் விஜய் மல்லையா இந்தியா அனுப்பப்பட்டதாக வெளியான தகவலை இங்கிலாந்து மறுத்துள்ளது. வங்கி மோசடி செய்துவிட்டு லண்டனில் வசித்து வரும் விஜய் மல்லையா, நேற்றிரவு மும்பை கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் பரவின. அங்குள்ள ஆர்தர் சாலை சிறையில் அவர் அடைக்கப்பட்டதாகவும் செய்திகள் உலா வந்தன. ஆனால், இதனை மல்லையாவின் வழக்கறிஞர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகளில் ரூ.9,961 கோடி கடன் ஏய்ப்பு செய்துவிட்டு லண்டனுக்கு…