விவசாயிகள் போராட முழு உரிமை உண்டு – உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!
புதுடெல்லி (17 டிச 2020): விவசாயிகள் போராட்டம் நடத்த முழு உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் வேலைநிறுத்தம் தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இவ்வாறு தெரிவித்தது. மேலும் மறு விசாரணையை ஜனவரி வரை ஒத்திவைத்துள்ளது. மேலும் விவசாய சட்டங்களின் சட்டப்பூர்வ செல்லுபடியாகும் தன்மை இப்போது ஆராயப்படாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. விவசாயிகளின் நிலை குறித்து நீதிமன்றம் கவலை தெரிவித்த அதே நேரத்தில், விவசாயிகளுக்கு போராடும் உரிமை உண்டு, அதில் நீதிமன்றம் தலையிட…