அதிமுக முன்னாள் அமைச்சர் வீடு உட்பட 55 இடங்களில் அதிரடி ரெய்டு!
சென்னை (10 ஆக 2021): அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீடு உட்பட 55 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அதிமுக உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, அரசு ஒப்பந்தப் பணிகள் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.2 கோடி மோசடி செய்துவிட்டதாக எஸ்.பி.வேலுமணி மீது திருவேங்கடம் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கோவை, குனியமுத்தூர் சுகுணாபுரம் பகுதியில்…