வேளாண் சட்டங்களுக்குத் தடை – விவசாயிகள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியா?
மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற கோரி டெல்லியில் கடந்த 49 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இப்போராட்டத்தினிடையே 50 பேர் இறந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. டெல்லியினுள் போராட்டக்காரர்கள் புகுந்துவிடாமல் இருக்க, டெல்லியின் நுழைவாயில் சாலைகள் அனைத்தும் காவல்துறையினரால் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. எனினும் அசராமல் விவசாயிகள் கடுமையான குளிரிலும் தங்கள் போராட்டங்களைத் தொடர்ந்து வந்தனர். தாங்கள் கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் பாதுகாப்பு வழங்குபவை தான் என்ற…