ஹஜ் யாத்திரை குறித்து ஒன்றிய அமைச்சர் விளக்கம்!

புதுடெல்லி (06 ஜூன் 2021): இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ஒன்றிய சிறுபான்மை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, சவூதி அரேபியா கடந்த ஆண்டு இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வரும் ஹஜ் யாத்ரீகர்களை தடை செய்தது. இந்த ஆண்டும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், புதிய வகை கொரோனா குறித்து கவலைகள் எழுப்பப்படுவதாலும் இந்த முறை…

மேலும்...

இந்திய அரசின் வழிகாட்டு விதிமுறைகளை மதிக்காத ட்வி ட்டர்!

புதுடெல்லி (31 மே 2021): இந்திய அரசின் புதிய விதிகளை ஏற்பதில் ட்வி ட்டர் காலதாமதம் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களுக்கு கடிவாளம் போடும் வகையில் கடந்த 26ஆம் தேதி புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது மத்திய அரசு. குறிப்பாக , குறைதீர்க்கும் அலுவலர், கட்டுப்பாட்டு அலுவலர், தலைமை குறைதீர்க்கும் அலுவலர் ஆகியோரை நியமிக்க வேண்டும்; அவர்கள் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்; அவர்களைப் பற்றிய முழு விபரங்களையும் தொடர்பு எண்களையும் தங்களின் சமூக ஊடக…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகம் – இந்தியா பயணத் தடை மேலும் நீட்டிப்பு!

துபாய் (30 மே 2021): இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்காண பயண தடை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது . இது ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சுற்றறிக்கை சம்பந்தப்பட்ட பயண முகவர் நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாவது அலையை தொடர்ந்து ஏப்ரல் 25 முதல் இந்தியாவில் இருந்து பயணிகள் விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்தது. இந்நிலையில் இந்தியாவில் கோவிட் விகிதங்கள் வீழ்ச்சியடைந்து வருவதால் ஐக்கிய அரபு அமீரகம் தனது…

மேலும்...

இந்தியாவுக்கு மீண்டும் ஆக்ஸிஜன் கொள்கலன்களை வழங்கிய சவூதி அரேபியா!

புதுடெல்லி (30 மே 2021): இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க சவூதி அரேபியா இந்தியாவுக்கு தற்போது மீண்டும் உதவிகளை வாரி வழங்கியுள்ளது. கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் காரணமாக இந்தியா, ஈடு செய்ய முடியாத அளவுக்கு மனித உயிர்களையும், பொருளாதார வீழ்ச்சியினையும் சந்தித்து வருகின்றது. இந்தியாவுக்கு உலக நாடுகள் பலவும் கொரோனா நிவாரண பொருட்களையும் உதவிகளையும் வாரி வழங்கி வருகின்றன. இந்நிலையில் ஏற்கனவே இந்தியாவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் என பலவற்றையும் அனுப்பிய சவுதி…

மேலும்...

இந்தியாவிற்கு விடுமுறையில் சென்றவர்களுக்கு சவூதி இந்திய தூதரகத்தின் முக்கிய தகவல்!

ரியாத் (26 மே 2021): சவுதியிலிருந்து விடுமுறையில் சென்ற இந்தியர்கள் இந்தியாவில் தடுப்பூசி பெறும்போது ஆதார் எண்ணுக்கு பதிலாக பாஸ்போர்ட் எண்ணை ஆவணமாக சமர்ப்பிக்குமாறு சவூதி இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய தூதர் டாக்டர். அவுசஃப் சயீத் கூறுகையில், இந்தியாவில் தடுப்பூசி பெறும்போது ஆதார் எண்ணை ஆவணமாக சமர்ப்பிக்கும் நிலை உள்ள நிலையில் அதற்கு பதிலாக பதிவு செய்ய பாஸ்போர்ட் எண்ணை வழங்குவதன் மூலம், சவுதி அரேபியாவுக்கு வருவதற்கான தொழில்நுட்ப சிக்கல்கள் தவிர்க்கப்படும். என்றார்…

மேலும்...

ஒரே மாஸ்க்கை தொடர்ந்து அணிந்தால் என்ன ஆகும்? -எய்ம்ஸ் நிபுணர் எச்சரிக்கை!

புதுடெல்லி (22 மே 2021): இரண்டு, மூன்று வாரங்களுக்கு ஒரே முககவசத்தை அணிந்தால் கருப்பு பூஞ்சை ஏற்படலாம் என எய்ம்ஸின் நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் பி சரத் சந்திரா கூறியுள்ளார் இந்தியாவில் கொரோனா ஒருபுறம் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் கருப்பு பூஞ்சை நோயும் தாக்கி வருவதோடு உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து இந்த நோயை கையாளுவதற்கான வழிக்காட்ட நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் இரண்டு, மூன்று வாரங்களுக்கு ஒரே முககவசத்தை அணிந்தால் கருப்பு பூஞ்சை ஏற்படலாம்…

மேலும்...

இந்திய ஊடகங்களுக்கு நோய் பிடித்துள்ளது – ராணா அய்யூப் தாக்கு!

புதுடெல்லி (29 ஏப் 2021): கொரோனா பிடியில் இந்தியா சிக்கியுள்ள நிலையில் இந்திய ஊடகங்கள் அதுகுறித்து கவலையில்லாமல் இருப்பதாக ராணா அய்யுப் தெரிவித்துள்ளார். பல்வேறு மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடத்தபட்டு இன்று முடிவுற்ற நிலையில் எக்ஸிட் போல்களை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து  பிரபல ஊடகவியலாளர் ராணா அய்யூப் ட்விட்டர் பக்கத்தில் ஊடகங்களை கடுமையாக சாடியுள்ளர். இந்தியாவில் கொரோனா பிடியில் சிக்கி தினமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வரும் நிலையில் ஊடகங்கள் அதுகுறித்து கவலையில்லாமல் எக்ஸிட் போல்…

மேலும்...

பிச்சை எடுத்தாவது ஆக்சிஜனை கொண்டு வாருங்கள் – மத்திய அரசு மீது நீதிமன்றம் பாய்ச்சல்!

புதுடெல்லி (22 ஏப் 2021): ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் பிச்சை எடுத்தாவது ஆக்சிஜனை கொண்டு வாருங்கள் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வட மாநிலங்களில் போதுமான ஆக்சிஜன் இல்லாததன் காரணமாக நோயாளிகள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் உயிரிழப்பும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் , டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று தங்களது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

மேலும்...

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் விலை உயர்வு!

புதுடெல்லி (21 ஏப் 2021): கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோஸை 250 ரூபாய் என்ற விலைக்கு சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் விற்பனை செய்து வந்தது. இந்நிலையில், தடுப்பூசிக்கான தேவை அதிகரித்து வரும் சூழ்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை சீரம் இன்ஸ்டிடியூட் உயர்த்தியுள்ளது. அதன்படி, இனி கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோஸ் மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என்றும் சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. இந்த விலை மத்திய அரசு வெளியிட்ட…

மேலும்...

இந்திய பயணத்திற்கு உலக நாடுகள் தடை!

புதுடெல்லி (20 ஏப் 2021): இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாலும், இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் பரவி வரும் இரட்டை மரபணு மாற்றமடைந்த கொரோனா, தங்கள் நாட்டில் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் சில உலக நாடுகள், இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு வருவதை தடை செய்துள்ளனர். இம்மாத தொடக்கத்தில் நியூசிலாந்து நாடு, இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதித்தது. தற்போது ஹாங்காங்கும் இந்திய பயணிகள் விமானத்திற்கு 14 நாட்கள் தடை விதித்துள்ளது. இந்த தடை இன்று…

மேலும்...