இந்தியர்கள் கத்தாருக்குச் செல்ல விசா வழங்கும் பணி துவக்கம்!

கத்தார் (ஜூலை 5): கொரோனா பரவல் காரணமாக, நெடுங்காலமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இந்தியர்களுக்கான விசாக்கள் வழங்கும் பணி, இன்று முதல் கத்தாரில் துவங்கியது. இதன்மூலம், கத்தாரில் வசிக்கும் இந்தியர்கள், தங்கள் குடும்பத்தினரை கத்தாருக்கு வரவழைக்கும் வண்ணம் ‘ரெஸிடென்ஸ் விசாக்கள்’ இன்றுமுதல் வழங்கப்படும். Metrash2 எனப்படும் கத்தர் அரசின் ஆப் வழியே மிக எளிதாக இந்த விசா பெற எவரும் விண்ணப்பிக்கலாம். இச்செய்தி, இந்தியர்களிடையே மிகுந்த வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.    

மேலும்...

கோவிட் தடுப்பூசி அனைவருக்கும் இலவசம்! கத்தார் அரசு அதிரடி அறிவிப்பு

தோஹா (06 நவம்பர் 2020): கொரோனா வைரஸுக்கான நிவாரண தடுப்பூசி, கத்தார் நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் முற்றிலும் இலவசம் என்று கத்தார் அரசு இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. கத்தார் நாட்டின் பொது சுகாதார அமைச்சகம் (Ministry of Public Health) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இச் செய்தி இடம் பெற்றுள்ளது. கோவிட்-19 தடுப்பூசிகளுக்காக புகழ் பெற்ற Pfizer மற்றும் BioNTech நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது கத்தார். Pfizer நிறுவனம் நடத்திவரும் தடுப்பூசிக்கான மருத்துவப் பரிசோதனைகள், இம்மாத இறுதியில்…

மேலும்...

இஸ்ரேலின் அராஜகம் முடிவுறாமல் அமைதி இல்லை – கத்தர்!

ஃபலஸ்தீன் மீதான இஸ்ரேலின் அடக்குமுறைக்கு முடிவு வராமல் அரபு பிரதேசத்தில் அமைதி திரும்புவதற்கு வாய்ப்பேயில்லை என ஐக்கிய நாடுகள் சபையில் கத்தர் அமீர் தமீம் பின் ஹமது அல்தானி கூறியுள்ளார். நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆவது பொதுசபை கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட கத்தர் அமீர், அரபு பிரதேசத்தில் இஸ்ரேல் நடத்தும் அராஜகங்களுக்கு முடிவு கொண்டு வரும் விசயத்தில் சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் சபை முதலான சர்வதேச நிறுவனங்களும் கண்மூடி இருப்பதற்குக் கண்டனம்…

மேலும்...