
இந்தியா – இடைவெளிகளின் தேசம்!
உலகின் மிகப்பெரிய நகரத்தின் ஒதுக்கப்பட்ட பகுதியாக அந்தச் சேரிப்பகுதி. மும்பையின் ரஃபீக்நகர் தான் அது. மூங்கில் எலும்புகளில் தார்ப்பாய்களை தோலாகப் போர்த்தியிருக்கும் அந்தக் குடியிருப்புகளில் தெளிந்த குடிநீர் கூட கிடைப்பதில்லை. குடிசைக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் பெரிய நீலநிற உருளை வடிவக் கலையங்களில் கலங்கலான பழுப்புநிற நீர், புழுக்கள் மிதக்கக் கிடைக்கிறது. சங்கிலியிடப்பட்டு ஒரு குவளையும் உண்டு. திட்டமின்மையையும் ஒழுங்கின்மையையும் பறை சாற்றியபடி தலைக்குமேல் செல்லும் சட்ட விரோத மின்னிழைகள் வழியாக ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறது மின்சாரம். இதனினும்…