எந்த சூழலிலும் ஹிஜாபை கைவிடமாட்டோம் – மாணவிகள் திட்டவட்டம்!

பெங்களூரு (05 பிப் 2022): எந்தச் சூழலிலும் ஹிஜாபை கைவிடமாட்டோம் என்று கர்நாடக கல்லூரி மாணவிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள பல கல்லூரிகளில் மாணவிகள் வகுப்புக்கு ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இது ஒருபுறமிருக்க முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது, இல்லையென்றால் நாங்கள் காவித் துண்டு அணிந்து வருவோம் என்று ஆர் எஸ் எஸ் அமைப்பு மாணவர்கள் காவித் துண்டுகளுடன் கல்லூரிகளுக்குள் நுழைந்து போராட்டம்…

மேலும்...

பாஜகவால் காலூன்ற முடியாது – ராகுலுக்கு அண்ணாமலை பதில்!

சென்னை (03 பிப் 2022): தமிழ்நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றுவோம்’ என்று ராகுல் காந்திக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, வாழ்நாளில் ஒரு போதும் தமிழ்நாட்டில் பாஜகவால் ஆதிக்கம் செலுத்த முடியாது எனவும், தமிழ்நாட்டிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் பாஜகவை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். இது குறித்து தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது பதில் கருத்தை ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,…

மேலும்...

அதிமுக, பாஜக கூட்டணி முறிவு – தேர்தலில் பாஜக தனித்து போட்டி!

சென்னை (31 ஜன 2022): நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை கமலாலயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். பாஜக தொண்டர்களின் குரலுக்கு செவிசாய்த்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், தனித்துப் போட்டியிடுவது என்பது கடினமான முடிவு அல்ல என்றும் அவர் தெரிவித்தார். மேலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமே தனித்து போட்டியிடுவதாகவும், அவர்…

மேலும்...

பாஜக புதிய வேட்பாளர் பட்டியலில் பிராமணர்களுக்கு முன்னுரிமை!

லக்னோ (29 ஜன 2022): உத்தரபிரதேசத்தில் பாஜக வெளியிட்டுள்ள புதிய வேட்பாளர் பட்டியலில் பிராமணர்களுக்கு அதிக இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. 91 வேட்பாளர்கள் கொண்ட பாஜக பட்டியலில் 21 பிராமண வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். அதே சமயம் பல்வேறு சமூகங்களும் பாஜகவை கைவிட்டு வருகின்றன. விவசாயிகள் போராட்டத்தை அடுத்து பாஜகவுக்கு எதிராக பல சமூகங்கள் ஒன்றிணைவதும் பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. ஜாட் சமூகம் பாஜகவில் இருந்து விலகி நிற்கிறது. இதனால் 200 ஜாட் தலைவர்களை அழைத்து பாஜக விவாதித்தது….

மேலும்...

அதிமுக கூட்டணியிலிருந்து விலக பாஜக முடிவு?

சென்னை (29 ஜன 2022): நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கேட்கும் இடங்கள் கிடைக்காத நிலையில் பாஜக தனித்துப் போட்டியிட ஆலோசித்து வருகிறது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. பிப்ரவரி 4ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். பிப்ரவரி 5ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். பிப்ரவரி 7ஆம்…

மேலும்...

இந்தியாவின் பணக்கார அரசியல் கட்சி பாஜக!

புதுடெல்லி (28 ஜன 2022): இந்தியாவின் பணக்கார அரசியல் கட்சி பாஜக என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2019-2020 நிதியாண்டில் நாட்டிலேயே அதிக செல்வம் படைத்த கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. அசோசியேட்டட் டெமாக்ரடிக் சீர்திருத்தங்கள் (ADR) நாட்டின் பணக்கார அரசியல் கட்சிகளின் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி பாஜகவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.4847.78 கோடி. சொத்து மதிப்பில் மாயாவதியின் பிஎஸ்பி ரூ.698.33 கோடி சொத்துகளுடன் நாட்டின் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியாக உள்ளது. 588.16 கோடி சொத்துகளுடன் காங்கிரஸ் மூன்றாவது…

மேலும்...

அதிமுக பாஜக இடையே பிளவு – பாஜக மீது பாய்ந்த அதிமுகவினர்!

சென்னை (26 ஜன 2022): அதிமுகவிற்கு ஆண்மை என்று பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசிய பேச்சு அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது அரியலூர் மாணவி மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி தமிழக பா.ஜ.க. சார்பில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பா.ஜனதா சட்டசபை தலைவரும், திருநெல்வேலி எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்….

மேலும்...

விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு – பாஜக அமைச்சர் மகன் மீது தாக்குதல்

பாட்னா (24 ஜன 2022): பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் பாஜக தலைவரும், மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான நாராயண் பிரசாத்தின் மகன் பப்லு குமாரை, துப்பாக்கி சூடு நடத்தியதாகக் கூறி கிராம மக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது. பீகார் மாநிலம் மொஃபுசில் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஹரடியா கோரி தோலா கிராமத்தில், அமைச்சரின் மகனை கிராம மக்கள் சிலர் தாக்குவதையும், அவர் வைத்திருந்த துப்பாக்கியை அவர்கள் பறித்துச் சென்ற காட்சிகளும் நேற்று வெளியாகின….

மேலும்...

பாஜகவால் 25 ஆண்டுகள் வீணாகிவிட்டன – உத்தவ் தாக்கரே!

மும்பை (24 ஜன 2022): பாஜகவுடனான கடந்த 25 ஆண்டுகால கூட்டணி வீணாகிவிட்டதாக சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிவசேனா முக்கிய பிரமுகர்களுடனான ஆன்லைன் கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, பாஜக நமது வீட்டிற்குள் நுழைந்து நம்மையே அழிக்க முற்பட்டு விட்டது. அதனாலேயே அக்கட்சியை விட்டு விலகினோம் என்றார். மேலும் அவர் தெரிவிக்கையில், இந்துத்துவா வலிமைக்காக பாஜகவுடன் சிவசேனா இணைந்தது. சிவசேனா ஒருபோதும் இந்துத்துவாவை அதிகாரத்திற்காக பயன்படுத்தியதில்லை. பாஜகவின் சந்தர்ப்பவாதம் இந்துத்துவாவை…

மேலும்...

கட்சி மாறமாட்டோம் – வேட்பாளர்களிடம் சத்தியம் வாங்கிய காங்கிரஸ் தலைமை!

பனாஜி (23 ஜன 2022): கோவா தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் கட்சி மாறமாட்டோம் என்று சத்தியம் வாங்கியுள்ளது காங்கிரஸ் கட்சி தலைமை. கோவா சட்டப்பேரவைக்கு கடந்தமுறை நடந்த தேர்தலில் காங்கிரஸ் மொத்தமுள்ள 40 இடங்களில் 17 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்தது. ஆனால் இவர்களில் பலர் அடுத்தடுத்து காங்கிரசிலிருந்து பாரதிய ஜனதாவுக்கு மாறிவிட்டனர். இதனால் ஆட்சியை கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது காங்கிரஸ் தரப்பில் 2 எம்எல்ஏக்கள் மட்டுமே மிஞ்சியுள்ளனர். இந்நிலையில், அடுத்த…

மேலும்...