
கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் வெடிகுண்டுத் தாக்குதல்!
தோஹா (09, செப் 2025): கத்தாரில் ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. உலகின் பாதுகாப்பான நாடுகளில் முதன்மை இடத்தைப் பெற்றுள்ள கத்தார், இஸ்ரேலின் இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. காஸா (பாலஸ்தீன்) மீது இஸ்ரேல் நடத்திவரும் இனப்பேரழிவுக்கான தீர்வு பற்றிய பேச்சுவார்த்தைக்கான தொடர் முயற்சியில் கத்தார் நாடு ஈடுபட்டு வருகிறது. இதில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கத்தாரில் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் உடன்பட மறுத்து வருகிறது. இந் நிலையில், ஹமாஸ்…