சுட்டுக் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி குடும்பத்துக்கு ரூ 1 கோடி – முதல்வர் அறிவிப்பு!
சென்னை (10 ஜன 2020): கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் குடும்பத்துக்கு ரூ1 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு சோதனை சாவடியில் களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் பணியில் இருந்தார். அப்போது அங்கு மர்ம நபர்களால் வில்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளது….