நான் காங்கிரஸ் தலைவரானால் இதெல்லாம் நடக்கும் – சசிதரூர் உறுதி!
கவுஹாத்தி (16 அக் 2022): காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் பாஜகவில் இணையும் காங்கிரஸ் தலைவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசிதரூர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் வாக்கு சேகரித்து கவுஹாத்தி சென்ற சசிதரூர் கூறுகையில், காந்தி குடும்பம் எப்பொழுதும் காங்கிரஸுடன் இருக்கிறது, நாங்களும் அப்படித்தான். காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் காங்கிரஸின் வெற்றி என்ற…