சவூதியில் ஆன்லைன் மூலம் வாகனம் பழுதுபார்க்கும் அனுமதி!
ரியாத் (28 டிச 2022): விபத்துக்குள்ளான வாகனத்தை பழுதுபார்ப்பதற்கான அனுமதியை ஆன்லைனில் பெறுவதை சவுதி அரேபியா எளிதாக்கியுள்ளது. வாகன பழுதுபார்ப்பு அனுமதியை அப்ஷர் இயங்குதளம் போர்டல் மூலம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் அதிகமான சேவைகளை மின்னணுமயமாக்குவதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்து வாகனங்களை பழுதுபார்ப்பதற்கான அனுமதிகள் இனி அப்ஷர் இயங்குதளம் மூலம் வழங்கப்படும் வசதியைப் பயன்படுத்தி, அதில் உள்ள மூன்று படிகளை முடிக்க வேண்டும் என்று அப்ஷர் சேவைத் துறை தெரிவித்துள்ளது….