கேரள மக்களுக்கு நன்றி தெரிவித்த ஆயிஷா சுல்தானா!
திருவனந்தபுரம் (19 ஜூன் 2021): லட்சத்தீவு விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகையும்,இயக்குனருமான ஆயிஷா சுல்தானா நாளை லட்சத்தீவு பயணம் மேற்கொள்கிறார். கேரள தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய ஆயிஷா சுல்தானா, லட்சத்தீவில், தற்போது தினசரி, 100 பேரிடம் கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. ‘இதை அத்தீவுகளில் வசிக்கும் மக்களுக்கு எதிராக, மத்திய அரசு கையில் எடுத்துள்ள உயிர் ஆயுதமாக கருதுகிறேன்’ என கருத்து தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, லட்சத்தீவுகளின் பா.ஜ.க., தலைவர் அப்துல்…