வரி ஏய்ப்பு – இளையராஜாவுக்கு ஜி.எஸ்.டி ஆணையம் இறுதி நோட்டீஸ்!
சென்னை (26 ஏப் 2022): வரி பாக்கி ரூ.1.87 கோடி ரூபாயை செலுத்தக் கோரி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரிபாக்கியை கட்ட வேண்டி ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி புலனாய்வுத் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திலிருந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதியன்று இளையராஜாவுக்கு ஒரு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது..அதில், சேவை வரி கட்டாததால், சேவை வரி ஏய்ப்பு தடுப்பு சட்டத்தின்படி, விசாரணைக்காக 2022 மார்ச் 10ம் தேதி காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும்…