பத்தாவது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட் – ஸ்டாலின் விமர்சனம்!
சென்னை (14 பிப் 2020): துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாசித்த பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையாற்றினார். இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின், ” சபாநாயகர் ஏன் 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பி இருக்கிறது. அந்த 11 பேரில் ஒருவராக இருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வம்…