தஞ்சை அருகே கோவில் திருவிழாவில் தேர் மீது மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலி!
தஞ்சை (27 ஏப் 2022): தஞ்சாவூர் அருகே கோவில் தேர் திருவிழாவில் தேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான 94 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு, திருவிழா தேரோட்டம் நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. தேர் களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக கொண்டுவரப்பட்டது. தேர் கோவில் அருகே வந்தபோது உயர் மின் அழுத்த கம்பியில் உரசியது….