கொரோனா வரியால் மக்கள் பெரும் அவதி!
புதுவை (28 மே 2020): கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை சரி செய்ய கொரோனா வரி விதிக்கப்பட்டுள்ளது பொதுமக்களை மேலும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. புதுவை மாநிலம் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கொரோனா வரியை விதித்துள்ளது. புதுவையில் பெட்ரோல் மீதான வரி 5.75 சதவீதமாகவும் டீசல் வரி 3.65 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கின்ற நிலையில், தற்போது பெட்ரோல் டீசல் விலையும் உயர்ந்திருப்பது மக்களுக்கு பெரும் அவதியை உருவாக்கியுள்ளது.