கொரோனா பாதிப்பில் சர்வதேச அளவில் மூன்றாமிடத்தில் இந்தியா!
புதுடெல்லி (06 ஜூலை 2020): கொரோனா பாதிப்பில் சர்வதேச அளவில் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் பல்வேறு மாநிலங்களும் இதுவரை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், நேற்று மட்டும் அதிகபட்சமாக ஏறக்குறைய 25,000 பேருக்கு ஒரே நாளில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மொத்த பாதிப்பு 6 லட்சத்து 97 ஆயிரத்து 257 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பில் சர்வதேச நாடுகளின் பட்டியலில் நான்காவது…
