போராட்டம் நடத்துவது தீவிரவாதமாகாது – சிஏஏ போராட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன்!
புதுடெல்லி (16 ஜூன் 2021): போராட்டம் நடத்துவது தீவிரவாதம் இல்லை என்று கூறிய டெல்லி உயர் நீதிமன்றம் நட்டாஷா நிர்வால், தேவங்கனா கலிட்டா, ஆஷிப் இக்பால் ஆகிய சிஏஏ போராட்டக்காரர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற சிஏஏ போராட்டம் தொடர்பாக நட்டாஷா நிர்வால், தேவங்கனா கலிட்டா, ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர் ஆஷிப்…