கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய பெண் மருத்துவர் இங்கிலாந்தில் மரணம்!
லண்டன் (13 மே 2020): கொரோனா பாதிப்பால் இந்திய மருத்துவர் இங்கிலாந்தில் உயிரிழந்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த 55 வயதான டாக்டர் பூர்ணிமா நாயர் கேரளாவில் பிறந்தவர். இவர் இங்கிலாந்தின் கவுண்டி டர்ஹாமில் உள்ள பிஷப் ஆக்லாந்தில் உள்ள ஸ்டேஷன் வியூ மருத்துவ மையத்தில் பணிபுரிந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு நீண்ட நாட்களாக உயிருக்கு போராடி வந்துள்ளார். இந்நிலையில் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.