உத்திர பிரதேச விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 9 பேர் பலி!
லக்னோ (04 அக் 2021): உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தலைநகர் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களில் பத்து மாதங்களுக்கும் மேலாக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள லக்கிம்பூர் மாவட்டத்திலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகிறார்கள். இந்நிலையில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, லக்கிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அந்த மாவட்டத்திலுள்ள பன்வீர்பூர்…