சர்வதேச பொறியியல் போட்டியில் தங்கம் வென்ற ஃபாத்திமா ஷெரீன்!

கொழும்பு (21 ஜன 2020): இந்தோனேசியாவில் நடைபெற்ற சர்வதேச பொறியியல் போட்டியில் இலங்கை மாணவி ஃபாத்திமா ஷெரீன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் சர்வதேச போட்டி ஜனவரி 13ஆம் தேதியிலிருந்து 16ஆம் தேதி வரை இந்தோனேசியாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பாத்திமா ஷெரீன் என்ற மாணவி முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் இலங்கை திரும்பியபோது விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.

மேலும்...