அமெரிக்க சம்பவத்துக்கு எதிராக போராட்டத்தில் மண்டியிட்ட கனடா பிரதமர்!
டொரன்டோ (07 ஜூன் 2020): ஆப்ரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்டு போலீஸ் அத்துமீறலால் சமீபத்தில் அமெரிக்காவில் உயிரிழந்தார். இதையடுத்து இன வெறி போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து உலகம் முழுதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் கனடா தலைநகரான ஒட்டாவாவில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். அப்போது போராட்டக்காரர்கள் அவரை மண்டியிடக் கூறினர். இதையடுத்து அவர் மண்டியிட்டு கோஷம் எழுப்பி போராட்டத்துக்கு தன் ஆதரவை தெரிவித்தார்.