இந்துத்வாவினருக்கு வேலை இல்லாமல் போய்விட்டது – அமைச்சர் சேகர்பாபு!
சென்னை (17 ஆக 2021): இந்துசமய அறநிலையத்துறையைப் பொறுத்தவரையில் இந்துத்வாவினருக்கு வேலை இல்லாமல் போய்விட்டது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் குறித்து தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அப்பொழுது பேசிய அவர், ”முறையாகப் பயிற்சிபெற்ற 58 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 58 அர்ச்சகர்கள் நியமனம் குறித்து சிலர் அவதூறாக தவறான பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சில ஊடகங்களும், ஒரு…