தனிமைப் படுத்தப்பட்டவர்கள் செய்ய வேண்டியவை என்னென்ன? – தமிழக அரசு விளக்கம்!
சென்னை (10 ஏப் 2020): கொரரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தனிமைப்பட்டு உள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு தனி கழிவறையுடன் கூடிய காற்றோட்டமான தனி அறையை ஒதுக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். வெளியே எங்கும் செல்லாமல் ஒதுக்கப்பட்ட அறையிலேயே இருக்க வேண்டும். பராமரிப்பு பணி செய்பவர் தவறாமல் முகக்சவசமும் கையுறையும் அணிந்திருக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது….