சர்வதேச திரைப்பட விழாவில் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை கழுவி ஊற்றிய நடுவர்!
கோவா (29 நவ 2022): கோவா-வில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அதில் திரையிடப்பட்ட தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் நாகரீகமற்றது என்று திரைப்பட விழா நடுவர் கூறியிருக்கிறார். 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவா தலைநகர் பனாஜி-யில் நடைபெற்றது. 9 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில், 79 நாடுகளைச் சேர்ந்த 280 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா நேற்றிரவு நடைபெற்றது. இதில் சிறந்த திரைப்படமாக ஸ்பெயின் மொழி…