கோவை சம்பவம் – நெல்லையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

நெல்லை (10 நவ 2022): அண்மையில் கோவையில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று தமிழகத்தில் அதிரடியாக 45 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், நெல்லை மற்றும் பாளையங்கோட்டை என இரண்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை டவுன் பகுதியில் இருக்கக்கூடிய சதாம் உசேன் என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இவர் தனியார் நிதி நிறுவனத்தில்…

மேலும்...

கோவையில் கோவிலுக்கு சென்ற முஸ்லிம் ஜமாத்தினர்!

கோவை (04 நவ 2022): கோயம்புத்தூரில் முஸ்லிம் ஜமாத்தினர் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று அங்குள்ள நிர்வாகிகளை சந்தித்துப் பேசினர். கோவை மாவட்டம் உக்டத்தில் கடந்த 23-ம் தேதி காரில் சிலிண்டர் வெடிப்பு நடந்த இடத்திற்கு அருகே உள்ள கோயிலில் மத நல்லிணக்க சந்திப்பு நடைபெற்றது. அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் தலைவர் இனையத்துல்லா தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் சங்கமேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் மற்றும் கோயில் பூசாரி உள்ளிட்டோரை சந்தித்தனர்….

மேலும்...

கோவை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கவில்லை – பாஜக பதில்!

சென்னை (28 அக் 2022): கோவையில் அக்டோபர் 31 ஆம் தேதி முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுக்கவில்லை என அண்ணாமலை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பாஜக சார்பில் அக்டோபர் 31 ஆம் தேதி கோவையில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த முழு அடைப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் எனவும்,…

மேலும்...

கோவை மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் – அரசுக்கு மார்க்சிஸ்ட் கோரிக்கை!

சென்னை (26 அக் 2022) : கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில், கோவை மக்களின் அச்சத்தை போக்கிட பாதுகாப்பினை பலப்படுத்திட வேண்டும் என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் காரின் சிலிண்டர் வெடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் இருந்த ஜமேசா முபீன் என்பவர் உயிரிழந்த நிலையில், காவல்துறை உடனடியாக…

மேலும்...

செந்தில் பாலாஜி காட்டில் மழை!

கோவை (11 மார்ச் 2022): தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியான திமுகவிற்கு பெரிதும் சாதகமாக அமைந்தது. குறிப்பாக கோவை மாவட்ட வெற்றியானது முதல்வர் மு.க.ஸ்டாலினிற்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. கோவை மாவட்டத்தில் கிடைத்த வெற்றிக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை கொண்டாடி தீர்த்துவிட்டார் அவர். இதற்கிடையில் கோவை மாநகராட்சியின் முதல் மேயராக 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார் பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு வயது 40. இவர் கோவையின் 6வது…

மேலும்...

கோவை தனியர் பள்ளியில் ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாம் – 5 பேர் மீது வழக்கு பதிவு!

கோவை (01 ஜன 2022): கோவை விளாங்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமை தொடர்ந்து 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை விளாங்குறிச்சி தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு எதிராக த.பெ.தி.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி வளாகத்திற்கு வெளியே நின்றிருந்த நபர்களை காவல்துறையினர் உள்ளே செல்ல அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இதனால், காவலர்களுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம்,…

மேலும்...

கேரளா தொடர் கொலை – கோவையில் வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

கேரளா தொடர் கொலை – கோவையில் வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு! கோவை (20 டிச 2021): கேரளாவில் எஸ்டிபிஐ மற்றும் பாஜக பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து கோவையில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. கேரளா, ஆலப்புழாவில் எஸ்.டி.பி.ஐ., கட்சி மாநில செயலர் ஷான் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்து, 12 மணி நேரத்துக்குள் பா.ஜ.,வை சேர்ந்த ரஞ்சித் ஸ்ரீனிவாசன் என்பவரை மர்ம நபர்கள் கொலை செய்தனர். இதனால்…

மேலும்...

கோவை ஈஷா மையத்தின் உண்மை முகம் – பாதிக்கப் பட்ட பெண்ணின் தாய் பகீர் தகவல்(வீடியோ)

கோவை ஈஷா மைய‌ம் குறித்து அவ்வப்போது பதற வைக்கும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான வீடியோ ஒன்று தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. அப்போதே பலர் அந்த மைய‌ம் குறித்தும் சத்குருவின் மோசடிகளை வெளியே கூறியபோதும் சத்குரு அவரது செல்வாக்கை பயன்படுத்தி யோகா மையம் குறித்த எந்த மோசடி தகவல்களும் வெளியே வராமல் பார்த்துக் கொண்டார். மக்களும் மறந்து விட்டனர். ஆனால் இவர்கள் போன்ற மோசடி பேர்வழிகளுக்கு ஆளும் அரசின் ஆதரவு…

மேலும்...

பட்டப்படிப்பு பயின்றாலும் துப்புரவு பணி செய்வதில் மகிழ்ச்சி – நெகிழ வைக்கும் மாணவி!

கோவை (07 மார்ச் 2020): கோவையில் எம்.எஸ்.ஸி பயின்று வரும் மாணவி துப்புரவு பணியாளராக தேர்வாகியிருப்பதில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இங்கு 2,520 நிரந்தர துப்புரவு தொழிலாளர்கள், 2,308 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். காலியாக உள்ள 549 துப்புரவு பணியாளர் பணியிடங்களை நிரப்ப மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த வேலைக்காக பி.எஸ்சி., பி.காம்., பி.இ. படித்த பட்டதாரிகள் உள்பட 7,300 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்….

மேலும்...

அர்ஜுன் சம்பத் மீது எஸ்டிபிஐ போலீசில் புகார்!

கோவை (05 மார்ச் 2020): அவதூறு பரப்பி கலவரத்தை தூண்ட முயல்வதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது எஸ்டிபிஐ கட்சியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மாவட்ட செயலாளர் உசேன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இதனை சீர்குலைக்க சிலர் முயற்சி செய்து வருகிறார்கள்….

மேலும்...