ஒன்றிய அரசு இயற்றும் சட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி அதிருப்தி!
புதுடெல்லி (15 ஆக 2021): இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்ற வளாகத்தில் நடந்த 75வது சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ”விவாதங்கள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்கள் இயற்றுவது வருத்தமளிக்கிறது. போதுமான விவாதங்கள் இன்றி சட்டங்கள் இயற்றப்படுவதால் அதிக வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. அதேபோல் விவாதங்கள் நடக்காததால் சட்டத்தின் நோக்கத்தை புரிந்து கொள்ள…