மாஃபியா – சினிமா விமர்சனம்!
ஆரம்ப காலங்களில் சாம்பார் ஹீரோவாக இருந்த அருண் விஜய், சமீப காலமாக கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறார், மேலும் துருவங்கள் 16 என்ற படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் நரேனுடன் கைக்கோர்த்துள்ளதால் படத்திற்கு எதிர் பார்ப்பு அதிகம். அருண்விஜய் போதை மருந்து தடுப்பு பிரிவில் பணிபுரிகிறார். அவருடைய டீமில் ப்ரியா மற்றும் ஒரு இளைஞர். சென்னையின் முக்கியமான இடங்களில் குறிப்பாக கல்லூரி மாணவர்களிடம் இருக்கு போதை பழக்கத்தை கண்டறிகின்றார். இதையெல்லாம் செய்வது பிரசன்னா…