அரசின் உத்தரவை மீறும் மலேசிய மக்கள் – கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தொட்டது!
கோலாலம்பூர் (22 மார்ச் 2020): மலேசிய அரசின் பொது நடமாட்ட கட்டுப்பாடு நடவடிக்கைக்கு பொது மக்கள் சரிவர ஒத்துழைக்காத நிலையில் மலேசியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டுள்ளது. மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,030ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆகவும் அதிகரித்துள்ளது. பொது நடமாட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்ட போதும், மலேசியர்கள் பலர் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கவில்லை. பொதுமக்கள் பலர் அரசாங்கத்தின் அறிவுறுத்தலை…