அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை (13 டிச 2022): திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட உள்ளார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்கும் பரிந்துரை கடிதம் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் கடந்த 10ஆம் தேதி கவர்னர் ஆர்.என். ரவிக்கு எழுதினார். இந்தக் கடிதத்தை முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் கவர்னரிடம் கொண்டு சென்றார். முதல்வரின் பரிந்துரையை ஏற்ற ஆளுநர், உதயநிதிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார். இந்தப் பதவிப் பிரமாணம் ஆளுநர் மாளிகையில் டிசம்பர்…

மேலும்...

தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் – யாருக்கு எந்தெந்த துறை?

சென்னை (07 டிச 2022): தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராகப் போவதாக பேச்சுகள் மீண்டும் எழத் தொடங்கியுள்ளன. அதுமட்டுமல்லாமல் கட்சியிலிருந்து விலகி மீண்டும் இணைந்துள்ளவர்களுக்கு கட்சிப் பதவி வழங்கப்பட்டதிலும் அதிருப்தி நிலவுகிறது. அவர்களையும் திருப்திபடுத்த வேண்டிய சூழலில் கட்சித் தலைமை உள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட உதயநிதி ஸ்டாலின்…

மேலும்...

முதலில் நெகட்டிவ் தற்போது பாஸிட்டிவ் – அமைச்சரை தாக்கிய கொரோனா வைரஸ்!

புதுடெல்லி (17 ஜூன் 2020): டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் உச்சத்தில் இருந்து வருகிறது. தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் விட அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்றரை லட்சத்தை நெருங்கி விட்டது. அது மட்டுமின்றி இந்தியாவில் கொரோனாவால் சுமார் 10,000 பேர் வரை பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கொரோனா…

மேலும்...

முகக்கவசம் இல்லை, சமூக இடைவெளி இல்லை – ஆயிரக்கணக்கானோர் புடைசூழ நடந்த அமைச்சர் வீட்டு திருமணம்!

கோவை (12 ஜூன் 2020): கொரோனா விதிமுறைகளைப் பற்றி கண்டுகொள்ளாமல் ஆயிரக்கணக்கானோர் புடைசூழ அமைச்சர் ராதாகிருஷ்ணன் இல்ல திருமணம் அமர்க்களமாக அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோலார்பட்டியை சேர்ந்தவர் கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் ஜெயபிரனிதா, பொள்ளாச்சி நகராட்சி முன்னாள் துணை தலைவர் விஜயகுமாரின் மகன் ஆதித்யன் ஆகியோருக்கு, கோலார்பட்டி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று திருமணம் நடந்தது. கொரோனா விதிமுறைகளைப் பற்றி கவலைப் படாமல் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று அதிர்ச்சி அடைய வைத்துள்ளனர். அரசுத்துறை அதிகாரிகள்,…

மேலும்...