தமிழகத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் எப்படி வாழ்கிறோம் தெரியுமா? – டெல்லிக்கு பாடம் நடத்திய நவாஸ்கனி!
சென்னை (20 ஏப் 2022): டெல்லியில் ஜஹாங்கிர்புரி பகுதியில் முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்பி நவாஸ்கனி தமிழகத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் எப்படி ஒற்றுமையுடன் வாழ்கிறோம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் முஸ்லிம்கள் தொடர்ந்து இதயமற்ற சங்பரிவார் கூட்டங்களால் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்படுகிறது, இஸ்லாமியர்களின் உடமைகள் தகர்க்கப்படுகிறது, பாதுகாப்பற்ற நிலையில் அங்குள்ள இஸ்லாமியர்கள் தவித்து…