நேபாளத்தில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து!

பொக்ரா (16 ஜன2023): நேபாளத்தில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. பொக்ரா சர்வதேச விமான நிலையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நேபாள தலைநகர் காத்மண்டுவின் திருபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட Yeti Airlines Flight 691 விமானம், பொக்ரா விமான நிலைய ஓடுபாதையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்துள்ளது. மோசமான வானிலையே காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணை தெரிவிக்கிறது. விபத்தின்போது 68 பயணிகளும் சிப்பந்திகளும் இருந்தனர். இச்…

மேலும்...

மருந்து தரத்தை மீறியதால் கருப்புப் பட்டியலில் பாபா ராம்தேவின் பதாஞ்சலி தயாரிப்பு நிறுவனம்!

காத்மண்டு (21 டிச 2022): உலக சுகாதார அமைப்பின் மருந்து உற்பத்தித் தரத்தை மீறியதாகக் கூறி பாப ராம்தேவின் பதாஞ்சலி உட்பட 6 இந்திய மருந்து நிறுவனங்களை நேபாளம் கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. இத்தகவலை நேபாள அரசு டிசம்பர் 18ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு மூலம் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகளை சப்ளை செய்யும் நேபாளத்தில் உள்ள உள்ளூர் முகவர்களை உடனடியாக ஆர்டர்களை திரும்பப் பெறுமாறு நேபாள அரசு கேட்டுக் கொண்டுள்ளது….

மேலும்...

நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம் – 6 பேர் பலி!

காத்மண்டு (09 நவ 2022): நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இன்று அதிகாலை 1.57 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் ரிக்டர் அளவு 6.3ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் டெல்லியிலும் உணரப்பட்டது. மேலும் இந்த நிலநடுக்கம் 10.கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று காலை நேபாளத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த சம்பவத்தால் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளும் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், நிலநடுக்கம் காரணமாக நேபாளத்தில்…

மேலும்...

யோகா கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்தியாவே இல்லை – நேபாள பிரதமர் பரபரப்பு கருத்து!

காத்மண்டு (22 ஜூன் 2021): கா கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்தியா உருவாக்கப்படவில்லை. என்றும் நேபாளில் தான் யோகா கண்டுபிடிக்கப்பட்டது என்று நேபாள நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஓலி. பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். நேற்று (21.06.2021) சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சிறப்புரையாற்றிய கே.பி. சர்மா ஓலி, யோகாவையும் தங்கள் நாட்டுக்குச் சொந்தமானது என கூறியுள்ளார். இதுதொடர்பாக கூறிய அவர், , “இந்தியா ஒரு தேசமாக உருவாவதற்கு முன்பே, நேபாளத்தில் யோகா பயிற்சி செய்யப்பட்டது. யோகா கண்டுபிடிக்கப்பட்டபோது,…

மேலும்...

மூன்று இந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்துடன் புதிய சட்ட மசோதா நேபாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

புதுடெல்லி (18 ஜூன் 2020): மூன்று இந்திய பிரதேசங்களை உள்ளடக்கிய நிர்வாக வரைபடத்தை புதுப்பிப்பதற்கான அரசியலமைப்பு திருத்த மசோதாவை நேபாளத்தின் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை ஒருமனதாக நிறைவேறியது. இதற்கு நேபாளத்தின் நாடாளுமன்றத்தின் கீழ் சபை சனிக்கிழமையன்று ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பைபதிவு செய்தது. இந்நிலையில் இந்த மசோதா அனைத்து 57 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்ததோடு இன்று அந்த மசோத நேபாள நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மே 8 ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தில் தர்ச்சுலாவுடன் லிபுலேக்…

மேலும்...

சுற்றுலா சென்ற இந்தியர்களுக்கு நிகழ்ந்த சோகம்!

நேபாள் (22 ஜன 2020): நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 8 இந்தியர்கள் சொகுசுபங்களாவில் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். நேபாளத்தில் உள்ள பிரபல சுற்றுலாத்தளமான போகாராவிற்கு, கேரளாவைச் சேர்ந்த 15 சுற்றுலாப்பயணிகள் சென்றிருந்தனர். அவர்கள் காத்மாண்டுவில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அந்த அறைகளில் எரிவாயுவில் இயங்கும் ஹீட்டர்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. அதிலிருந்து எரிவாயு கசிந்ததில் அங்கு தங்கியிருந்த 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அறையில் போதிய காற்றோட்டம் இல்லாததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு…

மேலும்...