
செம்பரம்பாக்கத்திலிருந்து சீறிப்பாய்ந்த தண்ணீர் – அடையாறு மக்களுக்கு எச்சரிக்கை!
சென்னை (25 நவ 2020): செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதை அடுத்து அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘நிவர்’ புயல் தீவிர புயலாக மாறி இன்று கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஒரு வாரத்திற்குப் பின் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி ஆகும். அதன் நீர்பிடிப்பு…