அதிமுக மீது ராமதாஸ் பாய்ச்சல்!

தருமபுரி (12 டிச 2021): தருமபுரியில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாமக தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை தலைவரும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது இந்த நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசும் போது கூறியதாவது: பெரும்பாலான சமுதாயங்கள் இடஒதுக்கீடு வந்தது தவறு என கூறி உச்சநீதி மன்றத்தில் தடையாணை பெற முயற்சி மேற்கொள்கின்றன. ஆனால் தற்போதைய திமுக…

மேலும்...

ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி – அதிமுக மீது ராமதாஸ் அதிருப்தி!

சென்னை (30 மார்ச் 2021): வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு தற்காலிகமானது என ஓபிஎஸ் அளித்துள்ள பேட்டி பாமகவினரை அதிருப்தி அடைய வைத்துள்ளது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின் படி மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 20 சதவீதம் இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள சீர்மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இதில், சீர்மரபினர் பிரிவில் 68 உட்பிரிவுகள் உள்ளன. மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில்…

மேலும்...

ராமதாஸ் அதிமுகவினருடன் பேச்சுவார்த்தை – ஆனால் தேர்தல் கூட்டணி குறித்து இல்லையாம்!

சென்னை (31 ஜன 2021): வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு குழுவுடன் பாமக வரும் 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் கோரிக்கையில் டாக்டர் ராமதாஸ் உறுதியாக இருப்பதால் அதிமுகவுடன் தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி இழுபறியிலேயே உள்ளது. இந்த நிலையில் நேற்று அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம் ஆகியோர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார்கள். சுமார் 2 மணி நேரம்…

மேலும்...

ஆர்.எஸ்.எஸ்ஸை பின்பற்றி செயல்பட வேண்டும் – ராமதாஸ் வேண்டுகோள்!

சென்னை (31 டிச 2020): ஆர்எஸ்எஸ் அமைப்பை போல் பாமகவினர் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் கட்சியினரிடம் கூறுகையில், ‘ பாமகவினர் திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கண்ணுக்குத் தெரியமால் தேர்தல் வேலைகளைச் செய்வார்கள் என்றும் அவர்களைப்போல் செயல்பட வேண்டும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தல்களில் பாமக தோல்வி அடைந்தற்கான காரணம், பாமக நிர்வாகிகள் சரிவர தேர்தல் பணியாற்றவில்லை என்பதுதான்…

மேலும்...

அதிமுக பாமக இடையே புகைச்சல்!

சென்னை (06 ஜன 2020): பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை தொடர்ந்து அதிமுக பாமக இடையே புகைச்சல் தொடங்கியுள்ளது. கடந்த 31-ந்தேதி திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் கூடியது. டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி தொடங்கி கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அரசியலில் பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வரும் பல கோரிக்கைகளை தீர்மானங்களாக…

மேலும்...