உற்சாகம் இழந்த பெருநாள் – நாகூர் தர்காவில் கூட்டு பிரார்த்தனை!
நாகூர் (26 மே 2020): லாக்டவுனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினார்கள். இவ்வருட ரம்ஜான் பண்டிகை உற்சாகம் இழந்ததாகவே காணப்பட்டது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வார்கள். நோன்பு நிறைவடைந்த பிறகு, ரமலான் மாத இறுதி நாளில் பிறை தெரியும். பிறை தென்பட்ட மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். இந்நிலையில், தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை…
