யூ டியூபர் சாட்டை துரைமுருகன் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!
சென்னை (03 ஜன 2022): யூ டியூபர் சாட்டை துரைமுருகன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம் ஃபாக்ஸ்கான் என்ற நிறுவனத்தின் பெண் ஊழியர்கள், அவர்கள் தங்கியிருந்த தனியார் விடுதி உணவை சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்கள், பின்னர் குணமடைந்தனர். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பரப்பியதாக, யூ டியூபர் சாட்டை துரைமுருகன் கடந்த 19 ஆம் தேதியன்று திருச்சியில் கைது செய்யப்பட்டார். 8 பிரிவுகளில்…