பில்கிஸ் பானு வழக்கு – திரிணாமுல் காங்கிரஸ் 48 மணி நேர தர்ணா!

கொல்கத்தா (06 செப் 2022): பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கில் 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் மகளிர் பிரிவு 48 மணி நேர தர்ணாவில் ஈடுபட்டது. தர்ணாவின்போது மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாக்தாவில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களால் பெண் ஒருவர் சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்தது உட்பட, பெண்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பைக் கையாள்வதில் மத்திய அரசின் மெத்தனமான அணுகுமுறைக்கு தலைவர்கள் கண்டனம்…

மேலும்...

எல்லா தொகுதிகளிலும் படுதோல்வி -அதிர்ச்சியில் பாஜக!

கொல்கத்தா (16 ஏப் 2022): மேற்கு வங்கம்,பீகார் மாநிலங்களில் இன்று வெளியான இடைத்தேர்தல் முடிவுகளில், பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு தொகுதியில்கூட வெற்றி கிடைக்கவில்லை/ பாரதிய ஜனதா வசம் இருந்த அசன்சோல் நாடாளுமன்ற தொகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட முன்னாள் பாலிவுட் நட்சத்திரம் சத்துருகன் சின்ஹா கிட்டத்தட்ட இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சின்ஹா ஆரம்பத்திலிருந்தே பாரதிய ஜனதா கட்சியின் அக்னிமித்திரா பாலை பின்னுக்குத்தள்ளி, முன்னிலை வகித்து வந்தார். சின்ஹாவுக்கு வெற்றி…

மேலும்...

திரிணாமுல் காங்கிரசின் நிலைப்பாடு பஜகவுக்கே சாதகம் – சிவசேனா!

புதுடெல்லி (10 ஜன 2022): கோவா சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசின் நிலைப்பாடு பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று சிவசேனா விமர்சித்துள்ளது. “கோவா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து நம்பிக்கையற்ற தலைவர்களை தன் பக்கம் இழுத்துள்ளது. இது ஏற்புடையதல்ல” என்று சிவசேனாவின் முகப்புத்தகமான சாம்னாவில் சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார். சட்டசபைத் தேர்தலுக்காக கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் அதிக அளவில் செலவு செய்வதாகவும், அக்கட்சி செலவழித்த நிதி எங்கிருந்து வந்தது என்றும்…

மேலும்...

கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் பாஜக, காங்கிரஸ் படுதோல்வி!

கொல்கத்தா (22 டிச 2021): மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 144 வார்டுகளில் 134 இடங்களில் அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மீதமுள்ள 10 வார்டுகளில் பாரதிய ஜனதா 3, காங்கிரஸ் 2, இடதுசாரிகள் 2 மற்றும் சுயேச்சைகள் 3 பேர் வெற்றிமுகத்தில் இருந்தனர். இப்படியாக தனது எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒற்றை இலக்கத்தில் நிற்கவைத்து, மூன்றிலக்க எண்ணில் முன்னணி வகித்து வெற்றி பெற்றுள்ளார்…

மேலும்...
Mamta-Banerjee

கோவில்,மசூதி,தேவாலயம் ஆகியவை இணைந்ததே திரிணாமூல் காங்கிரஸ் – மம்தா விளக்கம்!

பனாஜி (13 டிச 2021): கோவில்,மசூதி,தேவாலயம் ஆகியவை இணைந்ததே TMC (திரிணாமூல் காங்கிரஸ்) என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மூன்று நாள் சுற்றுப்பயணமாக கோவா சென்றுள்ள மம்தா, கோவாவின் பனாஜி நகரில், கட்சி தொண்டர்களிடம் பேசியபோது, “டிஎம்சி என்றால் ‘கோயில்-மசூதி-தேவாலயம்’ Temple, Mosque, church என்று அர்த்தம். நாங்கள் பாஜகவுடன் போராடுகிறோம். நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் நம்பிக்கையுடன் இருந்தால், பின்வாங்காதீர்கள். முன்னேறிச்…

மேலும்...

முதலில் பாஜக பின்பு காங்கிரஸ் இப்போ எந்த கட்சி தெரியுமா? – கட்சிகளை சுற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்!

புதுடெல்லி (23 நவ 2021): முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் மம்தா கட்சியில் இணைகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத். 1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கீர்த்தி ஆசாத் அரசியலுக்குள் நுழைந்து பா.ஜனதாவில் சேர்ந்தார். 1999, 2009, 2014 ஆகிய 3 முறை அவர் எம்.பி.யாக இருந்தார். 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கீர்த்தி ஆசாத்…

மேலும்...

காங்கிரஸ் கட்சியிலிருந்து மேலும் ஒரு தலைவர் விலகல்!

புதுடெல்லி (16 ஆக 2021): காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணித் தலைவி சுஷ்மிதா தேவ், அக்கட்சியிலிருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அசாமின் பராக் பள்ளத்தாக்கு பகுதியில் சுஷ்மிதா தேவ் மிக முக்கியமான தலைவர் ஆவார். முன்னதாக அவர், தனது பதவி விலகல் கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பியிருந்தார். ஆனால், அந்த கடிதத்தில் பதவி விலக்கலுக்கான எந்தக் காரணத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. இருப்பினும், கடந்த சில மாதங்களாக அவர் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்தாகக்…

மேலும்...

திரிணாமுல் காங்கிரஸில் இணையும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன்!

கொல்கத்தா (05 ஜூலை 2021): முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஜித் முகர்ஜி திரிணாமுல் காங்கிரசில் இணையவுள்ளார். மேற்கு வங்கத்தின் ஜாங்கிபூரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பியும், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகனுமான அபிஜித் முகர்ஜி, கடந்த சில வாரங்களாக டி.எம்.சி தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். முன்னதாக முகர்ஜி கடந்த மாதம் டி.எம்.சி தலைவர் அபிஷேக் பானர்ஜியை சந்தித்தார். இதனை அடுத்து தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் அவர் டிஎம்சியில் இணையவுள்ளதாக…

மேலும்...

பாஜக வைரஸ் – சானிடைசர் அடித்து சுத்தம் செய்யப்பட்ட பாஜகவினர்!

கொல்கத்தா (24 ஜூன் 2021): பாஜகவிலிருந்து திரிணாமுல் காங்கிரசில் இணைந்த 150 பேருக்கு பாஜக வைரஸ் இருப்பதாகக் கூறி அவர்களை சானிடைசர் அடித்து திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர். மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த தேர்தல் பாஜகவுக்கு பேரதிர்ச்சியை கொடுத்த நிலையில், பாஜக கூடாரம் காலியாகி வருகிறது. ஏற்கனவே திரிணாமுல் காங்கிரசிலிருந்து பாஜகவில் இணைந்தவர்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு திரும்பி வருகின்றனர்.  இந்நிலையில் பிர்பூமின் இளம்பஜார் தொகுதியில் 150 பாஜகவினர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர். இவர்களுக்கு பாஜக வைரஸ்…

மேலும்...

கவிழும் அபாயத்தில் பாஜக ஆட்சி!

திரிபுரா (17 ஜூன் 2021): திரிபுரா மாநிலத்தில் ஒன்பது பாஜக எம்.எல்.ஏக்கள் திரிணாமூல் காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அங்கு ஆளும் பாஜக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தது. இந்நிலையில் மேற்கு வங்க திரிணாமூல் காங்கிரஸின் மூத்த தலைவராக இருந்த முகுல் ராய், பாஜகவில் இணைந்தார். அதேநேரத்தில் திரிபுரா திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேர் பாஜகவில் இணைந்தனர். இதற்கு முகுல் ராயே…

மேலும்...