பாக். மற்றும் ஆப்கன் போர் நிறுத்தம் - தோஹாவில் ஒப்பந்தம்

பாக். மற்றும் ஆப்கன் போர் நிறுத்தம் – தோஹாவில் ஒப்பந்தம்

தோஹா, கத்தார் (18 அக் 2025): பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்து வரும் போர்,  நிறுத்தம் கண்டுள்ளது. தோஹாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தைக்கு கத்தார் அரசு மற்றும் துருக்கி குடியரசு நடுவர்களாக இருந்தன. கத்தார் நாட்டின் வெளிநாட்டு விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது: “அமைதிப்…

மேலும்...
எழுபதாயிரம் உயிர்கள் பலி, காஸா நிர்மூலம்: ஹமாஸ் பெற்றுக் கொண்டது என்ன?

எழுபதாயிரம் உயிர்கள் பலி, காஸா நிர்மூலம்: ஹமாஸ் பெற்றுக் கொண்டது என்ன?

காஸா (07 அக் 2025):  கடந்த அக்டோபர் 7, 2023 ஆம் ஆண்டு ஹமாஸ் இஸ்ரேலின்மீது அதிரடியாக பதிலடித் தாக்குதல் நடத்தியதில் 1,400 இஸ்ரேலியர் கொல்லப்பட்டதுடன், 251 பணயக்கைதிகளை பிடித்துச் சென்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதுவரை ஆங்காங்கே இருபது, முப்பது என காஸா நகர மக்களை கொன்று வந்த இஸ்ரேல், அக்டோபர் 7, 2023 நிகழ்வுக்குப் பிறகு காஸாவின் மீது மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தி முழுமையான இன அழிப்பில் ஈடுபட்டுக் கொண்டுள்ளது. (அக்.7  நிகழ்வுக்குப்…

மேலும்...

கத்தார் நாட்டு பிரதமரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு!

தோஹா, கத்தார் (29 செப் 2025): தோஹா மீது நிகழ்த்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதலுக்காக, கத்தார் நாட்டு பிரதமரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு. இனியொரு முறை இத்தகைய தாக்குதலை கத்தார் மீது ஒருபோதும் நடத்த மாட்டோம் என உறுதியளித்துள்ளார் நெதன்யாஹு. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில் கடந்த செப்டம்பர் 09, 2025 அன்று கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. உலகின் பாதுகாப்பான நாடுகளில் முதன்மை…

மேலும்...

பாகிஸ்தானுடன் சவுதி பரஸ்பர அணுசக்தி பாதுகாப்பு ஒப்பந்தம்!

ரியாத், சவூதி அரேபியா (17 செப் 2025): சவுதி அரேபியாவும் அணுசக்தி வலிமை கொண்ட பாகிஸ்தானும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.  கடந்த புதன்கிழமை 17 செப் 2025 அன்று ரியாத்தில் நடந்த சந்திப்பின் போது, ​​சவுதி நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோர் இந்த வரலாற்று ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: (இந்நேரம்.காம்) சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின்…

மேலும்...
கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதல்: வலுக்கும் உலகத் தலைவர்களின் கண்டனங்கள்

கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதல்: உலகத் தலைவர்களின் வலுக்கும் கண்டனங்கள்

தோஹா, கத்தார் (10 செப் 2025):  கடந்த செப்டம்பர் 9, 2025 அன்று கத்தார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் அத்துமீறி வான்வழி தாக்குதல் நடத்திய சூழலில், இன்று கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி (Sheikh Tamim bin Hamad Al Thani) உடன் அலைபேசியில் பேசியுள்ளார் பிரதமர் மோடி. கத்தார் நாட்டுடனான இந்தியாவின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு, ஹமாஸ் அமைப்பின் அலுவலகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட இஸ்ரேலின் கோழைத்தனமான தாக்குதலை இந்தியா கடுமையாக கண்டிப்பதை…

மேலும்...
கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் வெடிகுண்டுத் தாக்குதல்!

கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் வெடிகுண்டுத் தாக்குதல்!

தோஹா (09, செப் 2025): கத்தாரில் ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.   உலகின் பாதுகாப்பான நாடுகளில் முதன்மை இடத்தைப் பெற்றுள்ள கத்தார், இஸ்ரேலின் இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. காஸா (பாலஸ்தீன்) மீது இஸ்ரேல் நடத்திவரும் இனப்பேரழிவுக்கான தீர்வு பற்றிய பேச்சுவார்த்தைக்கான தொடர் முயற்சியில் கத்தார் நாடு ஈடுபட்டு வருகிறது.   இதில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கத்தாரில் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் உடன்பட மறுத்து வருகிறது. இந் நிலையில், ஹமாஸ்…

மேலும்...

வளைகுடா நாடுகளுக்கு வருகிறது புதிய போக்குவரத்து சட்டம்!

குவைத் (31 ஆகஸ்ட் 2025): வளைகுடா (GCC) நாடுகளில் வாகனங்களில் பயணம் செய்வோருக்கான போக்குவரத்து விதிமுறை மீறல்களை ஒருங்கிணைக்கும் திட்டம் 95% நிறைவடைந்துள்ளது. இதற்கான புதிய போக்குவரத்து சட்டம் பற்றி GCC பொதுச் செயலாளர் ஜாஸிம் முகம்மது அல்-புதைவி அறிவித்துள்ளார். சமீபத்தில் குவைத் நாளிதழான அல் கபாஸ்க்கு இவர் அளித்த நேர்காணலில், இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் GCC நாடுகளுக்கு இடையே நிகழும் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் உடனடியாக தவறிழைத்தவருக்கு தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். (இந்நேரம்.காம்) இதுநாள்…

மேலும்...

GCC நாடுகளில் பணிபுரிபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

குவைத் (10 ஆகஸ்ட் 2025):  வளைகுடா (GCC) நாடுகளில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. குவைத் நாட்டிற்குச் செல்ல இனி தனியே விசா எடுக்கத் தேவையில்லை.  “ஆன் அரைவல்” விசா மூலம் இனி எவரும் குவைத்திற்கு எளிதாகச் செல்லலாம். சுற்றுலா செல்வோரும் இந்த விசாவை பயன்படுத்திக் கொள்ளலாம் என குவைத் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை, குவைத் நாட்டின் முதல் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரான ஷேக் ஃபஹத் யூசுப் சவுத் அல்-சபாஹ் அறிவித்துள்ளார். குவைத் நாடு…

மேலும்...

பயங்கர ஆயுதங்களைக் கடத்த முயன்ற ஐந்து பேர் கத்தாரில் கைது!

தோஹா, கத்தார் (09 ஆகஸ்ட் 2025) :  கத்தார் நாட்டிற்குள் AK-47 உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கடத்த முயன்ற ஐந்து பேர் கத்தாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சின் குற்றப்புலனாய்வு துறை இவர்களைக் கைது செய்துள்ளது. இவர்கள் கத்தார் நாட்டுக்குள் ஏற்கனவே துப்பாக்கிகளை கடத்தி வந்ததும் சட்டவிரோதமாக விற்பனை செய்வதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  கத்தாரில் கைது செய்யப்பட்ட மூவர் வெளிநாட்டினர் மற்றும் இரு நபர்கள் கத்தார் நாட்டு குடிமக்களாவர். (inneram.com) துப்பாக்கிகளை சிலர்…

மேலும்...

புகைப்படத்தைப் பரப்பினால், ஒரு லட்சம் ரியால் அபராதம்!

தோஹா (05 ஆகஸ்ட் 2025):  முன் அனுமதி பெறாமல் ஒருவரின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை இணையத்தில் பரப்பினால், ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது 100,000 கத்தார் ரியால் அபராதம் (இந்திய ரூபாய் மதிப்பில் 23.5 லட்சம்) விதிக்கப்படும் என கத்தார் நாடு அறிவித்துள்ளது. இதற்குரிய சட்டத் திருத்தங்களை இன்று கத்தார் அரசு வெளியிட்டுள்ளது. மேலும் இது சைபர் குற்றமாகக் கருதப்படும் என்றும் அறிவித்துள்ளது. கத்தார் நாட்டில் வசிக்கும் மக்கள் மற்றும் வருகை தரும் சுற்றுலா பயணிகள், நகரின் பொது…

மேலும்...