கொரோனா பாதிப்பால் மத்திய அமைச்சர் மரணம்!

புதுடெல்லி (24 செப் 2020): கொரோனா பாதிப்பால் மத்திய ரெயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி (வயது 65) உயிரிழந்துள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் அங்காடி, சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். சுரேஷ் அங்காடி கர்நாடகாவைச் சேர்ந்தவர். கர்நாடகாவின் பெலகாவி தொகுதியில் இருந்து 4 முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். டெல்லியில் இருந்து சுரேஷ் அங்காடியின்…

மேலும்...

தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு கொரோனா தொற்று!

சென்னை (24 செப் 2020): தேமுதிக தலைவர் விஜய்காந்த் கொரோனா அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனும்திக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விஜயகாந்த் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மியாட் மருத்துவமனைக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் சென்றபோது, அவருக்கு லேசான கொரோனா அறிகுறி இருப்பது தென்பட்டது. அது உடனடியாக சரிசெய்யப்பட்டது. தற்போது விஜயகாந்த் நலமுடன் உள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய்காந்த் விரைவில் குணமடைய வேண்டும் என…

மேலும்...

கொரோனா பாதித்தும் கல்லூரி தேர்வை கைவிடாத மாணவர்!

வாணியம்பாடி (20 செப் 2020): கொரோனா பாதித்தும் கல்லூரி இறுதியாண்டு தேர்வை எழுதியுள்ளார் மாணவர் அனீசுர் ரஹ்மான்! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஷிராபாத் பகுதியை சேர்ந்த அனீசூர் ரஹமான் என்ற மாணவர், வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் இளங்கலை வணிகவியல் என்கிற பி.காம் பாடப்பிரிவில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் கொரோனா தொற்று பாதிக்கபட்டு, கொரோனா மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ளப்படி பல்கலைகழகம் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவ – மாணவிகளுக்கான தேர்வுகளை…

மேலும்...

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை எப்படி உள்ளது? – மகன் தகவல்!

சென்னை (17 செப் 2020): கொரோனா பாதித்து தொடர் சிகிச்சையில் இருந்து வரும் ‘எஸ்.பி.பி. உடல்நிலை சீராக இருப்பதாக அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார். ‘எக்மோ’ மற்றும் ‘வென்டிலேட்டர்’ உதவி நீண்ட நாட்களுக்கு தேவைப்படாது” என அவரது மகன் சரண் நேற்று தெரிவித்தார். கடந்த மாதம் 5ம் தேதி முதல் சென்னை எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் எஸ்பிபி. . அவருக்கு ‘எக்மோ’ உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு…

மேலும்...

உள்ளே இருந்தவர்தான் கமல்ஹாசன் – அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!

சென்னை (16 செப் 2020): பிக்பாஸை தொகுத்து வழங்கும் கமல் கொரோனாவுக்கு பயந்து 100 நாட்கள் வீட்டில் அடைந்து கிடந்தவர்தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று சென்னை, கிண்டி ஹால்டா அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “, 17 ஆண்டுகளாக மத்தியில் கூட்டணியில்…

மேலும்...

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியது!

புதுடெல்லி (16 செப் 2020): இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ள நிலையில் தற்போதைய நிலவரப்படி 50 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் 2-வது நாடாக இந்தியா நீடித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டி, 50 லட்சத்து 20 ஆயிரத்து 360 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 95 ஆயிரத்து 933 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,…

மேலும்...

கொரோனாவால் தமிழகத்தில் குழந்தைகள் பெருமளவில் பாதிப்பு!

சென்னை (15 செப் 2020): தமிழகத்தில் இதுவரை 22 ஆயிரம் குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று 78 ஆயிரத்து 190 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,153 ஆண்கள், 2,599 பெண்கள் என மொத்தம் 5,752 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 10 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 156 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 770…

மேலும்...

எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா மீண்டும் அனுமதி!

புதுடெல்லி(13 செப் 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்ட அமித்ஷா, கொரோனா நெகட்டிவ் ஆன நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருமுறை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக அமித்ஷா மேலும் சில நாள் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்...

எடப்பாடி, ஓபிஎஸ் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியீடு!

சென்னை (12 செப் 2020): முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. வரும் 14-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் 3-ம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் சட்டசபை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபையை நடத்துவதற்கு ஏற்ற வகையில் கலைவாணர் அரங்கம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. 14, 15 மற்றும் 16 ஆகிய 3 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுகிறது….

மேலும்...

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி (கோவாக்சின்) சோதனையில் முன்னேற்றம்!

புதுடெல்லி (12 செப் 2020): கொரோனாவிற்கான தடுப்பூசியில் இந்தியாவின் கண்டுபிடிப்பான (கோவாக்சின்) சோதனை முறையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஜூலை மாதம் 23-ஆம் தேதி இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு சோதிக்க இந்திய மருத்துவ ஆய்வு கழகம் அனுமதி வழங்கியது. இந்தியாவில் 12 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் சென்னை காட்டங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரியில் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தியா முழுவதும் நடத்திய சோதனையில் தடுப்பூசி…

மேலும்...