வாகனங்களில் குழந்தைகள்: கத்தாரில் கடுமையாகிறது சட்டம்!
தோஹா (04, நவம்பர் 2025): வாகனங்களில் குழந்தைகள் அமர்வது குறித்த சட்டத்தை மீண்டும் நினைவுறுத்தி, கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகம் (MoI) எச்சரிக்கை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது பெற்றோரின் பொறுப்பு என்பதை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை வாகனத்தின் முன் இருக்கையில் உட்கார அனுமதிப்பது, போக்குவரத்து சட்டத்தின் பிரிவு (55) இல் உள்ள கிளாஸ் (3) படி, அப்பட்டமான போக்குவரத்து விதி மீறலாகவும், குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தாகவும் கருதப்படுகிறது என்று…
